தோழர்கள் எண்ணிக்கை

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

Green Zone - பச்சைவனமும் பாலைவனமும் ....(thanks to ILLUMINATI )

இல்லாத பேரழிவு ஆயுதங்களைத் தேட நியமிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க ராணுவ குழு ஒன்றின் தலைவன் ராய் மில்லர்.தனக்கு கொடுக்கப்படும் தகவல்களை நம்பி,தனது உயிரையும் தனது குழு ஆட்களது உயிரையும் பணயம் வைத்து,ஆயுதங்களை தேடும் வீரன்.தொடர்ச்சியாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் எந்த ஒரு ஆயுதமும் கிடைக்காமல் போக,தனக்கு கொடுக்கப்படும் தகவல்களை சந்தேகப்படுகிறான்.ஆனால்,மேலிடத்தில் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி அவன் கேள்வி எழுப்பும் போது, எப்போதும் ஒலிக்கும் அதிகாரத்தின் ஆணவக்குரல் அவனை அடக்க முயல்கிறது.கொடுக்கப்படும் தகவல்களைக் கொண்டு,அவனுக்கு அளிக்கப்படும் வேலைகளை செய்வது மட்டுமே அவனது பணி என்றும்,அதன் ஸ்திரத்தன்மை பற்றிய ஆராய்ச்சி அவனது வேலை இல்லை என்றும் கூறப்படுகிறது.

புதன், 16 பிப்ரவரி, 2011

ஆடுகளம்: மண்ணை விடுத்து சினிமாப் புனைவில் ஆடும் களம்!

திரைவிமரிசனம் எழுதி நாளாயிற்றே, ஆடுகளத்தை எழுதலாமே” என்று தோழர் ஒருவர் கேட்டார். சற்றே காத்திரமான கதைகளை கொண்ட படங்களை எழுதவேண்டுமென்றால் அத்தகைய வாய்ப்புகள் அதிகமில்லை. வாய்ப்புகள் இல்லை என்பதற்காக திரை விமரிசனங்கள் எழுதாமலும் இருக்க கூடாது. அரசியல், சமூக கண்ணோட்டத்தை கூட சினிமா வழியாக சொன்னால் நமது மக்கள் கொஞ்சம் பரிசீலிப்பார்களில்லையா? ஆக துணிந்து ஆடுகளம் சென்றோம்.

செவ்வாய், 2 நவம்பர், 2010

“சட்டத்திற்கு முன்னால் யாவரும் சமமாக காட்டப்படுவார்கள்.” : நன்றி:ரதன்

Last Stop 174, Visitor ஆகிய படங்களை முன்வைத்து
There’s a Brazilian quote, “equals are treated equally in front of the law,” . கடந்த வாரங்களில் நடைபெற்ற ஒரு சம்பவம் “சட்டத்திற்கு முன்னால் மட்டும் சமமாக நடாத்தப்படுவார்கள்” என மேற்கூறிய கூற்றை வாசிக்க வைக்கின்றது. ஒன்று சோமாலியவில் பிறந்த கனடிய பெண்மணி நைரோபியில் விமானம் ஏற முற்பட்ட பொழுது போலிப் படத்தைக் கொண்ட கடவுச் சீட்டு எனக் கூறி சுமார் மூன்று மாதங்கள் அந்தரத்திலும் இதில் ஒரு கிழமை சிறையிலும் கழித்த சம்பவம். நிற வெறி பிடித்த கனடிய பழமைவாதக் கட்சி அரசு இறுதி வரை உதவவில்லை. தொடர் முயற்சிகளின் பின்னர் டி.என்.எ சோதனையில் கனடாவில் வசிக்கும் அவரது மகனது இரத்தத்தை தாயின் இரத்தத்துடன் ஒப்பிட்டு மகனது தாய் இவர் தான் என்பதை நிறமூர்த்தங்கள் நிரூபித்தத்தையடுத்தே கனடா வர அனுமதிக்கப்பட்டார்.

முதலாளித்துவம் ஓர் பாவமா? -மைக்கல் மூர் ஓர் சிறு அறிமுகம்!(Capitalism: A Love Story ): thanks ரதன்

Capitalism: A Love Story (2009)
Director:Michael Moore
மைக்கல் மூர் ஓர் சிறு அறிமுகம்:
 மைக்கல் மூர் அமெரிக்க மிச்சிக்கன் மாநில தொழில் நகரமான Flintஇல் பிறந்து வளர்ந்தவர். இவர் தனது முதலாவது படமான Roger and Me  வெளிக்கொணர்ந்தபொழுது இவர் கிழமைக்கு 99 அமெரிக்க டொலர்களை சம்பளமாகப் பெற்றுக் கொண்டிருந்தார். உலகின் சிறந்த விவரணத் திரைப்படப்பாளிகளில் இவருக்கும் ஓர் இடமுண்டு.


வெள்ளி, 22 அக்டோபர், 2010

சன் டிவி மற்றும் கலைஞர் டிவி – தொலைக்காட்சி பயங்கரவாதம் : எம்.எஸ்.ஆர்

தமிழக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக சன் டிவி மற்றும் கலைஞர் டிவி வழங்கும் தொலைக்காட்சி பயங்கரவாதம்
இன்று ஊடகம் என்றாலே வெறும் பொழுது போக்கு சாதனமாக பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.ஒரு சிலரே அதை செய்தி அறிந்து கொள்வதற்கான சாதனமாக மட்டும்புரிந்து கொண்டுள்ளனர்.ஊடகத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள புகழ்பெற்ற ஊடக விமர்சர்கரும் மொழியியலின் தந்தையுமானஅறிஞர் நோம் சாம்ஸ்கி (Noam Chomsky) கூறுவதிலிருந்து துவங்குவோம்.

வெள்ளி, 15 அக்டோபர், 2010

Australia


இரண்டாம் உலகப் போரின் செய்தியுடன் ‘ஆஸ்திரேலியா’ திரைப்படம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் கறுப்பினருக்கும் வௌ;ளையருக்கும் பிறந்த குழந்தைகளை வௌ;ளையர்கள் அவர்கள் சமூகத்தில் கலந்து புது இனமாகிவிடக்கூடாது என எண்ணி அத்தகையோரை கவர்ந்து தனியான இடங்களில் அவர்களை அடைத்து வைத்திருந்த காலகட்டம்.

தி வே ஹோம் : உணர்வுகளின் சிம்பொனி

தி வே ஹோம்

 தனிமை.வாழ்க்கை மனிதனுக்கு இரண்டு பரிசுகளை கொடையாக த்ருகிறது
அதனை போல இன்பம் நிறைந்த பாடும் இல்லை துன்பம் நிறைந்த பாடும் இல்லை.இளமையில் காதல்வசப்படும்போது உலகமே நம்மை உற்று கவனித்தலும் நமக்குள் நாம் தனிமையில்தான் வாழ்கிறோம். எவரும் நுழையமுடியாத் பொன் வண்ணம் பூசப்பட்ட வேலிகளுடானன
மலர்கள் நிறைந்ததொரு கனவுத்தோட்டம் அது. யாரும் இல்லாத அந்த தோட்டத்தில் பட்டாம்பூச்சிகள் நம்மை சுற்றி பறக்கும்.ஆனால் அதே சமயம் முதுமையில் அதே தனிமையில் நம்முள் இருப்பது என்ன ?

விரிதியானா (1961)

விரிதியானா (1961)



உலக சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர் லூயி புனுவல். மதம் மற்றும் தனி மனிதர்கள் மீது மதம் விதிக்கும் கட்டுப்பாடுகள் பற்றிய தன்னுடைய கருத்துகளை தைரியமாக முன்வைத்த ஸ்பானிஷ் இயக்குனர்.

The Circle

வாழ்வை நமக்கு மிக நெருக்கமாகக் காட்டுகின்றது சினிமா. அதனால் தான் அதன் மேல் ஒரு தீரா மோகம் நம்மை எப்போதும் ஆட்டி படைக்கிறது.
நம்மை திரையில் பார்ப்பது போன்ற உணர்வுகளால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதனால் தான் ஆனால் உலக சினிமாவிலிருந்து ஈரானிய சினிமா எப்போதும் தனித்தே நிற்கின்றது.