இரண்டாம் உலகப் போரின் செய்தியுடன் ‘ஆஸ்திரேலியா’ திரைப்படம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியில் கறுப்பினருக்கும் வௌ;ளையருக்கும் பிறந்த குழந்தைகளை வௌ;ளையர்கள் அவர்கள் சமூகத்தில் கலந்து புது இனமாகிவிடக்கூடாது என எண்ணி அத்தகையோரை கவர்ந்து தனியான இடங்களில் அவர்களை அடைத்து வைத்திருந்த காலகட்டம்.
ஜார்ஜ் எனும் பழங்குடியினரைச் சார்ந்த அரசன் தன்னுடைய பேரனாகிய சிறுவன் நல்லாவிற்கு தன்னுடைய நாட்டு மருத்துவத்தையும் மந்திர தந்திரங்களையும் சொல்லித் தருகிறார். வௌ;ளையர் பிடித்துப் போக வந்தால் அவர்கள் கண்ணிலிருந்து தப்பி மாயமாய் ஒளிந்து கொள்ளும் வித்தைகளையும் சொல்லித் தந்திருக்கிறார். மேலும் தாத்தாவிடமிருந்து மீன் பிடிக்கவும் மாடுகளை திறமையுடன் மேய்த்து பராமரிக்கவும் கற்றுத் கற்றுக் கொள்கிறான். தன் மீது அசராத நம்பிக்கையுடைய சிறுவனாக அவனை உருவாக்கியிருக்கிறார் ஜார்ஜ்.
ஒரு நாள் நல்லா தாத்தாவிடம் இருக்கும் போது மந்தையில் ஏதோ குழப்பம் ஏற்பட தாத்தா அவனை நீருக்கடியில் உடன் மறையச் சொல்கிறார். அவனும் மாயமாகி நீரின் அடியில் செல்கிறான். அவனைத் தொடர்ந்து பின்னால் ஒரு அம்பினால் குத்திக் கொல்லப்பட்டிருந்த வௌ;ளைக்காரன் ஒருவனின் பிணம் நீரினுள் வந்து விழுகிறது. வௌ;ளைக்காரனைப் பிடிக்காத தன் தாத்தா கொன்றிருப்பார் என எண்ணுகிறான் நல்லா. இறந்தவனுடைய குதிரையைப் பார்த்து பிரியப்பட்டு அதனை அழைக்கிறான் நல்லா. அது அமைதியாக அவனிடம் வரவே, அதன் மீதேறி தன்னுடைய வாழ்விட்த்திற்கு விரைகிறான். ‘குயசயறயல னுழறளெ’ என்ற எஸ்டேட்டில் தான் அவனுடைய தாய் வேலை செய்கிறாள். குதிரையிலிருந்து தாவி குதித்து வீட்டுக்கு அருகே வருகையில் தூரத்தில் ஏதோ ஒரு கார் வருவதைக் கண்டு தன்னைப் பிடித்து போக வந்திருப்பார்களோ என்று அச்சப்பட்டு ஓட்டமாய் ஓடி உயரமான தண்ணீர் தொட்டியினுள் ஒளிந்து கொள்கிறான். ஆனால் அவனை பிடிக்க வந்த கூட்டம் இல்லை அது, ட்ரோவர் என்பவனும் அவனுடன் லேடி சாரா ஆஷ்லே என்பவளும், அவர்களுடன் வேலையாளான ஒரு கலப்பினரும் வந்திருந்தார்கள். கதைசொல்லியான நல்லாவின் பார்வையிலிருந்து இவ்வளவு விஷயங்களும் காட்சிப்படுத்தப்படுகிறது. ’நான் அந்த வௌ;ளைக்கார சீமாட்டியை முதலில் பார்த்தது அப்போதுதான், ஆனால் இந்தக் கதையின் துவக்கம் இதுவல்ல...வேறு இடத்திலிருந்து’என்று அவன் குரல் ஒலிக்கையில் லேடி சாரா ஆஷ்லே இங்கிலாந்தில் இருக்கும் தன் மாளிகையிலிருந்து அவசரமாய் புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவளை ஒருவர் ஆஸ்திரேலியாவிலிருக்கும் ”ஃபார் அவே டவுன்ஸ்” சொத்தை விற்க வேண்டாம் என்று அறுவுறுத்திக் கொண்டிருந்தார், எதையும் கேட்கும் மனநிலையில் இல்லாத சாரா தான் நினைத்ததை செய்து முடிக்கும் பெண். அடிக்கடி கணவன் வேலை என்று சொல்லி வேறு ஏதோ ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதாக சந்தேகப்படுகிறாள். சொத்தை விற்கும் சாக்கில் அவன் என்னதான் செய்கிறான் என்பதை ஆராய அவள் முடிவெடுக்கிறாள். பணமும் படிப்பும் அதற்கேற்ற அதிகாரமும் அவள் வசம் இருக்கையில் நினைத்ததை முடிக்க தனியாக விமானத்தில் ஏறிச் செல்கிறாள். கடிதம் மூலம் அவள் கணவன் வரவேண்டாம் என்று செய்தி அனுப்பியும், பிடிவாதக்காரியான சாரா அதை அலட்சியப்படுத்தி கிளம்பிவிடவே, வேறு வழியில்லாத ஆஷ்லே அவளின் துணையாக ட்ரோவர் என்பவனை ஏற்பாடு செய்திருப்பதாக தொலைபேசியில் சொல்கிறான்.
டார்வின் எனும் இட்த்திற்கு ஒருவழியாக வந்து சேர்கிறாள் சாரா. அங்கு ஒரு பாரில் அடிதடியில் இறங்கி அந்த இட்த்தையே துவச்சம் செய்து கொண்டிருக்கிறான் ட்ரோவர். அதைக் கண்டுகொள்ளாமல் நேராக அந்த பாரினுள் நுழைந்த சாரா பார் பணியாளரிடம் தனக்கு ஒரு பியர் ஆர்டர் செய்கிறாள். பெண்களுக்கு அங்கே குடிக்க அனுமதி இல்லை என்கிறான் அவன். எரிச்சலுடன் அங்கிருந்து வெளியே செல்ல எத்தனிக்கையில் பார் வாசலில் அந்த சண்டை உக்கிரம் அடைகிறது. வெளியே வந்த சாராவின் பெட்டியை உடைத்து அதிலிருந்த துணிகளை தூக்கி எறிகிறான் ட்ரோவர். கத்திய சாராவை சண்டை முடிந்த்தும் அலட்சியமாக பார்க்கிறான். அவள் தான் சாரா என்பதை அறிந்தும் அதே அலட்சியத்துடன் இருக்கிறான் ட்ரோவர். அவன் ஒரு நாடோடி. தான் யாருக்கும் தலைவணங்காதவன், யாரும் எனக்கு எஜமான்ன் இல்லை, ஆஷ்லே சொல்லியிருப்பதால் சாராவை எஸ்டேட்டிற்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டிருப்பதாய் சொல்கிறான். அடுத்த நாளே ஒரு ஓட்டை ட்ரக்கில் சாராவை அழைத்துக் கொண்டு புறப்படுகிறான். வழியெங்கிலும் அவனுடைய அட்டகாச சிரிப்பையும் ஆரவாரத்தையும் டெண்ட் அடித்து தங்கும் இடங்களில் அவனுடைய முரட்டுப் பேச்சுகளை வேறு வழியின்றி சகித்துக் கொண்டு பயணம் செய்கிறாள் சாரா.
ஒருவழியாய் அவர்கள் எஸ்டேட்டிற்கு வந்து சேர்கிறார்கள். அந்தக் காரைப் பார்த்துதான் ஓடி ஒளிந்திருக்கிறான் நல்லா. ட்ரோவரின் பேச்சுகளிலும் தன்னை பெரிதாக மதிக்காத எரிச்சலினாலும் காரிலிருந்து இறங்கியவுடன் விடுபட்ட உண்ர்வுடன் வீட்டினுள் வேகமாக செல்ல முயல்கிறாள் சாரா. அவளை ட்ரோவர் தடுக்கிறான், எதையும் கேட்காத இயல்பினளான சாரா வீட்டிற்குள் சென்றதும் மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளாகிறாள். அவளுடைய கணவனின் இறந்த உடல் மேஜையின் மீது கிட்த்தப்பட்டிருக்கிறது. துயருடன் அவன் உடலை அடக்கம் செய்துவிட்டு அந்த ஊரிலேயே இருந்து சொத்தை கார்னே எனும் பெரும் பணக்கார துரைக்கு விற்க முடிவெடுக்கிறாள். சாராவின் இட்த்தைத் தவிர அந்த பிரதேசம் முழுவதும் கார்னே குடும்பத்தார்க்கு சொந்தம். இதை அவர்களிடமே விற்று விட்டால் முழுமையாக இருக்கும் என நினைத்தாள் சாரா.
அந்த இரவில் தனிமையில், பழக்கம் இல்லாத புது இட்த்தில் உறக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் சாரா. பறவையின் ஒலி போன்ற ஏதோ சத்தம் கேட்டு எழுந்து நிற்கையில் அங்கு படிக்கட்டின் அடியில் ஒரு உருவத்தைக் கண்டு அஞ்சுகிறாள். அது நல்லா. தன்னைப் பற்றி அவளிடம் சொல்லி தன் தாத்தா ஜார்ஜ் அவளின் வருகையைப் பற்றி முன்னரே தெரிவித்திருக்கிறார் என்கிறான். மேலும் ப்ளெட்ஜர் என்பவனின் உதவியுடன் கார்னே இவர்களின் மாட்டுக் கொட்டையில் கைவைக்கிறார்கள், நிறைய மாடுகளை கவர்ந்து விட்டார்கள் தடுக்க வந்த தங்களை பலமுறை துரத்தியடித்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறான். முதலில் இதை நம்ப மறுக்கிறாள் சாரா. ஆனால் அந்த அப்பாவி சிறுவனின் வௌ;ளந்தியான பேச்சும் மாய வசீகரமான அவனின் குரலும், மிக்க் கூர்மையான அவன் விழிகளின் தீட்சண்யமும் முதல் பார்வையிலேயே அவனை அவளுக்கு பிடித்துவிடுகிறது. நீ மழை போன்றவள் என்று என் தாத்தா சொல்லியிருக்கிறார் என்கிறான் நல்லா. அவள் அமைதியாக புன்னகைக்கையில் நல்லாவின் அம்மா அங்கு ஓடோடி வந்து தன் மகனை போலீஸ் பார்வையிலிருந்து காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள். அப்போது கார் சத்தம் கேட்கவே தாயும் மகனும் ஓடிப் போய் தங்களின் மறைவிட்த்தில் ஒளிந்து கொள்கிறார்கள். சாராவின் கணவரின் ட்ரைவர் ப்ளெட்சர் தான் வந்திருந்தான் அடுத்த நாள் காலை சாரா சொத்து விற்பனை சம்பந்தமாக கிளம்பி கொண்டிருந்தாள். அங்கு வந்த ப்ளெட்ஜரைப் பார்த்து தன் எஸ்டேட்டில் நடக்கும் ஊழல்களைப் பற்றிக் கேட்கிறாள். அவன் அப்படி எதுவும் இல்லை என மழுப்புகிறான். சாரா நல்லா எல்லா
விஷயத்தையும் தன்னிடம் சொல்லிவிட்ட்தாக அவள் சொல்கிறாள். நல்லா பயப்படாதே இங்கு வா என்று அழைக்கிறாள். முந்தைய இரவில் ப்ளெட்ஜர் நல்லாவின் வீட்டிற்கு அவன் சென்றிருந்தான். அவன் அம்மாவும் பாட்டியும் ப்ளெட்ஜரிடம் போ என்று அவர்கள் பாஷையில் சொல்கிறார்கள். நல்லா அவனுடைய மகன் தான். ஆனால் ஏனோ அவனுக்கு எப்போதோ வந்து விருந்தாளியைப் போல் தங்கிவிட்டுப் போகும் அவனை சுத்தமாக பிடிக்கவில்லை. இப்போது அவனைப் பற்றி சாராவிடம் வேறு சொல்லிவிட்ட்தால் இனி தன் நிலை என்னவாகும் என பயந்தபடி ப்ளெட்ஜரின் அருகில் செல்கிறான். அவன் நயமாக பேசி அவனை அருகில் வரவழைத்து அடித்துத் துவைக்கிறான். இதைப் பார்த்து மிகவும் கோப்ப்பட்ட சாரா நல்லாவை காப்பாற்றி ப்ளெட்ஜரை உடனடியாக வேலையை விட்டு தூக்கிவிடுகிறாள். 1500 மாடுகளை எப்படி நீ தனி ஆளாய் விற்கப்போகிறாய் அதையும் பார்த்துவிடுகிறேன் எனக் கறுவியபடி ப்ளெட்ஜர் அங்கிருந்து ஆத்திரத்துடன் செல்கிறான். அன்றிலிருந்து சாராவை அவர்கள் ‘மிஸஸ் பாஸ்’ என அழைக்கத் துவங்கினர். போலீஸ் ஒருவர் அவ்வீட்டுக்கு வருவதைப் பார்த்த நல்லாவும் அவன் தாயும் உயரமான அந்த நீர்த்தொட்டியில் வழக்கம் போல பதுங்கிக் கொள்கிறார்கள். போலீசுடன் வந்த ட்ரைவர் முகம் கழுவ அத்தொட்டியில் தண்ணீரை திறந்துவிடவே நீர் நிலை ஏறிக்கொண்டே வருகிறது. நீண்ட போராட்ட்த்திற்குப் பிறகு நல்லாவைக் காப்பாற்றிவிட்டு தன்னுயிரை விடுகிறாள் அந்த கறுப்பினத் தாய். மனம் உடைந்த நல்லாவை சாரா தேற்றுகிறாள். அவனுக்கு கதை சொல்லியும் பாட்டுப் பாடியும் தன்னால் இயன்ற வரை அந்த பிஞ்சின் மனதில் நம்பிக்கை ஊற்றை நிரப்புகிறாள் பிறப்பால் வௌ;ளையராக இருந்தாலும் மனித நேயத்துடன் இருக்கும் அந்த அன்னை போன்றவள்.
பணப் பற்றாக்குறையினாலும், தன்னுடைய சொத்து இப்படி அநியாயமாக திருடப்பட்டுக்கொண்டிருப்பதை தவிர்க்க உடனடியாக அதை விற்க முடிவெடுக்கிறாள். தன்னிடம் உள்ள மாட்டுப் பண்ணையை விற்றால் நிலைமையை சமன் செய்ய முடியும் என அறிந்து காரியத்தில் இறங்குகிறாள். இதற்கெல்லாம் காரணமான கார்னேவின் மந்தை வேறு போட்டிக்கு விற்பனைக்கு வந்துள்ளது அதை முந்தவேண்டும் என்ற நிர்பந்தமும் கூடவே எழ என்ன செய்வது எனக் குழம்பித் தவிக்கிறாள். சரியான சமயத்தில் வந்து சேர்கிறான் ட்ரோவர். அவனைத் துணைக்கு அழைக்கிறாள் சாரா பரிசாக தன்னுடைய செல்லக் குதிரையை அவனுக்குத் தருவதாய் வாக்களிக்கிறாள் அவனும் சம்மதிக்கிறான்.
அடுத்த நாள் சாரா தன் சிறிய குழுவினருடன் புறப்படுகிறாள். புழுதி படர்ந்த அந்த நாளின் நெடும்பயணத்திற்கு ட்ரோவர், நல்லா மற்றும் ப்ளயன் எனும் கலப்பினருடன் அவர்கள் கிளம்பினார்கள். சொத்தை கைமாற்ற மட்டுமில்லாமல் தனக்கு முன்னால் கப்பலில் வந்திருக்கும் ஆர்மியிடம் சாரா மந்தையை விற்கப் போவதை அறிந்த சிற்றரசன் கார்னே ஆத்திரம் அடைகிறான். ப்ளெட்ஜரிடம் இதை எப்படியாவது தடுக்குமாறு சொல்கிறான். ப்ளெட்ஜர் சிரித்தபடி சம்மதிக்கிறான். 1500 மாடுகளுடன் அணிவகுத்து சாராவும் கூட்ட்த்தினரும் கடும்பாறைகளூடே பயணப்பட்டுக் கொண்டிருக்கும் போது வெடி மருந்து போட்டு மாடுகளை அச்சுறுத்தி அவை கலைந்து ஓடுமாறு செய்கிறான் ப்ளெட்ஜர். மிரண்ட மாடுகள் திசையறியாது ஓட ஆரம்பித்தன. இந்தக் களேப்ரத்தில் கீழே விழுந்த ப்ளைன்னை மிதித்து துவம்சம் செய்துவிடுகின்றன. அடுத்து அதற்கிடையே மாட்டிக் கொண்ட நல்லா பெரிய மலையின் நுனியில் ஓட இடமில்லாமல் அப்படியே நிற்கிறான். தன் கண் எதிரே 1500 மாடுகள் வெறியுடன் ஓடி வருகிறது, பின்னால் ஒரு அடி எடுத்துவைத்தாலும் அதல பாதாளம். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சாராவின் இதயமே நின்றுவிடும் படி துடிக்கிறது. ஆனால் நல்லா அஞ்சவில்லை. அரசனாகிய தன் தாத்தா ஜார்ஜ் சொல்லித் தந்திருந்த பாடலொன்று அவன் நினைவிற்கு வந்த்து. மாடுகளை ஆற்றுப் படுத்த அவன் தன் மாயக் குரலால் ஒலி எழுப்புகிறான். கண்களை கூர்மைபடுத்தி மாடுகளை நோக்கி நிறுத்தாமல் பாடவே அவை ஒரு நொடியில் அடங்கி அப்படியே நின்று விடுகின்றன. சாராவும் ஓடோடிவந்து மயங்கிக் கீழே விழ இருந்த நல்லாவை தூக்கி மடியில் கிடத்துகிறாள். உனக்கு ஒன்றும் ஆகாது நல்லா...என்று திரும்பத் திரும்பச் சொல்கிறாள். இதனிடையில் மரணத்தின் வெகு அருகில் இருந்த ப்ளையன் இறப்பதற்கு முன் சாராவிடம் நல்லாவைப் பார்த்துக் கொள்ளும் படி சொல்கிறார், மேலும் அவள் கணவனைக் கொன்றது எல்லாரும் சந்தேகிக்கும் கறுப்பினர் யாருமில்லை, ப்ளெட்ஜர் தான் அந்த வேலையைச் செய்த்து எனவே கார்னே ஆட்கள் வெற்றிபெறக்கூடாது நீ எல்லாவற்றையும் சரி செய்துவிடு எனக் கூறி உயிர் இழக்கிறார். சோகத்துடன் அவர்களின் பயணம் மீண்டும் தொடர்கிறது. சாராவும் ட்ரோவரும் கருத்து வேறுபாட்டினால் அடிக்கடி சண்டை போட்டாலும் அவர்களை அறியாமல் ஒருவர் மீது மற்றவர் ஈர்ப்பாகி தங்கள் வசமிழந்து காதலில் வீழ்கிறார்கள். ட்ரோவர் முதலில் அவளின் சொல் பேச்சு எதையும் கேட்காவிட்டாலும் அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்பவனாய் மாறிவிட்டான். அவளும் அவனின் அன்பின் பிடியில் தான் மிகவும் பாதுகாக்கப்பட்டவளாய் உணர்ந்தாள். இருவரும் மர நிழலொன்றில் முத்தங்களையும் தங்கள் மனதையும் பரிமாறிக்கொண்ட்தை மர உச்சியில் இருந்த நல்லா பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்க அவர்கள் வழிந்தபடி ஒன்றுமில்லை என்கிறார்கள். அதன் பின் சாரா ட்ரோவர் சொல்லும் எதையும் மறுபேச்சின்றி கேட்கிறாள். அவன் கட்டளைகள் யாவும் இவளின் வெற்றிக்காகவும், அவளின் அடங்குதல் யாவும் அவனின் அன்பிற்குமாய் இறுக்கமான ஒரு உறவில் இருவரும் நெகிழத் துவங்குகிறார்கள்.
அடுத்தடுத்து அவர்களின் பயணத்தூடே பலவிதமான தடைகளை ப்ளெட்ஜர் மற்றும் கார்னே ஏற்படுத்துகிறார்கள். சாரா சொத்து விற்பதை தள்ளிப்போட்டிருக்கிறாள் மேலும் எல்லா தடைகளையும் தாண்டி வேகமாக மாடுகளுடன் முன்னேறிக்கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்த கார்னே தன் சதி பலிக்காத ஆத்திரத்தில் ப்ளெட்ஜரை திட்டுகிறான். தனியாக இவர்கள் எப்படி எல்லா இடையூறுகளையும் சமாளித்தார்கள் என்பது புதிர் என்றுரைக்கிறான் ப்ளெட்ஜர். எப்படியும் இறுதியில் தங்கள் எல்லைக்கு வந்துதான் ஆகவேண்டும் அப்போது அவர்களை ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்றும் உறுதியளிக்கிறான். இந்த பயணத்தில் சாராவுக்கு உறுதுணையாய் இருந்தவன் ட்ரோவர் மற்றும் நல்லா மட்டுமல்லாது கண்ணுக்குத் தெரியாமல் அவர்கள் செல்லும் வழியெங்கிலும் நிழலாக தொடர்ந்து வந்த கறுப்பின அரசன் ஜார்ஜ்.
கார்னேயின் அத்தனை சதிகளையும் அவனுக்கு சொந்தமான இடத்தில் அவனுடைய அரஜாகங்களை எதிர்கொண்டு மிக வீரத்துடன் கடந்து தான் நினைத்த காரியத்தை முடிக்கிறாள் சாரா. யாருமே இதை எதிர்ப்பார்க்கவில்லி. குறித்த நேரத்தில் ஆர்மியினரிடம் அக்ரிமெண்டில் சொன்னபடி 1500 மாடுகளை ஒப்படைத்து கையெழுத்திட்டு பணத்தை வாங்கிக் கொள்கிறாள் அத் துணிச்சலான பெண். ப்ளெட்ஜரும் கார்னேயும் பொறாமையில் வெந்து போகிறார்கள். டார்வினில் இளைப்பாறி இதனைக் கொண்டாட சாரா பாருக்கு சென்று தனக்கு பியர் தரும்படி கேட்கிறாள். மறுபடியும் அதே ஆள் இங்கே பெண்களுக்கு அனுமதி இல்லை என்கிறான். அங்கிருந்த ஒருவன் அவள் பெண்ணே இல்லை, ஆணைகளைவிட தைரியம் மிக்கவள் ஆயிரம் மாடுகளை ஓட்டிச் சென்று விற்றவள் எனப் பெருமையாக சொல்லி அவளுக்கு பியர் தரும்படி பரிந்துரைக்கிறான். அவர்கள் அந்நாளினை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வீடு திரும்புகிறார்கள்.
அடுத்த நாள் காலை அவள் புத்தாடை அணிந்து புன்னகையுடன் ட்ரோவரிடம் பரிசாக செல்லக் குதிரையை அளிக்கிறாள். வேறு எங்கும் போகவேண்டாம் அங்கேயே தங்கி மானேஜராக வேலை செய்யச் சொல்கிறாள். ஆனால் ட்ரோவர் மறுத்துவிடுகிறான். அன்றைய இரவு அடுத்த ஊருக்கு ஒரு விருந்திற்கு செல்லப்போவதாகவும் அவனுக்கு விருப்பம் இருந்தால் வரலாம் என்றும் ஒரு அழகான கோட் ஒன்றை பரிசளிக்கிறாள்.
விருந்தில் சில ஆண்களும் பெண்களும் அவளைப் பற்றிப் புறம் பேசி சீண்டுகிறார்கள். இதைக் கேட்ட சாரா அவர்களை சாடுகிறாள். கலப்பின பிள்ளைகளை பிடித்து வந்து அடிமைப்படுத்தும் சமூகத்தில் நாம் எல்லாம் இருக்கிறோம் என ஆவேசத்துடன் கூறுகிறாள். அவளின் பேச்சு அங்கே சலசலப்பை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் பேரழகியான அவளுடன் ஆட போட்டி நடைபெறுகிறது. 500 பவுண்ட் என்று அதிகமாக தொகையை சொல்லி கார்னே முன் வருகிறான். அவளுடனான ஆட்டத்தில் நடந்தவற்றை மறந்துவிடுமாறும் எஸ்டேட்டை நல்ல விலைக்கு எடுத்துக் கொள்வதாகவும் அங்குள்ளவர்களை விரட்டியடிக்காமல் ஒழுங்காக பராமரிப்பதாகவும் வாக்களிக்கிறான். சற்று குழம்பிய நிலையில் இதையெல்லாம் எழுதி பத்திரத்தில் கையெழுத்திட்டுத் தரமுடியுமா என அவள் கேட்க தாராளமாக என்கிறான் கார்னே. அப்போது வாசலில் யாரோ வர அந்த இடம் பரபரப்பாகிறது. சாரா பரிசளித்த வௌ;ளை கோட் அணிந்து கம்பீரமாக உள்ளே நுழைந்தான் ட்ரோவர். கார்னேயிடம் இனி என் சொத்து விற்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதே எனச் சொல்லிவிட்டு ட்ரோவரிடம் விரைந்தாள் சாரா.
ட்ரோவரும் ஒரு கலப்பின்ன், நோயுற்ற கறுப்பின மனைவியை இழந்தவன் என்பதை ஏற்கனவே சாரா அறிந்திருந்தாள். சிறிதேயான தயக்கமும் நீங்க அவள் மனம் முழுக்க ட்ரோவர் நிறைதுவிட்டான். காதல் மொழி, இனம், நிறம் என சகலத்தையும் கடந்த்து. அது ஒரு தெய்வீகமான நிலை. தங்களை சுற்றியிருந்த உலகத்தை மறந்து காதல் வசப்பட்ட அவ்விருவரும் சேர்ந்து ஆட ஆரம்பித்தார்கள். அச்சமயத்தில் அங்கு வந்த ப்ளெட்ஜரை அவர்கள் அலட்சியப்படுத்தினார்கள். தன் மகளை ப்ளெட்ஜர் காதலிப்பதை தெரிந்துகொண்ட கார்னே எச்சரித்து எல்லாவற்றிலும் தோற்றுவிட்டாய் என கடுமையாக திட்டுகிறார்.
ட்ரோவருடன் புதுவாழ்க்கையைத் தொடங்கிய சாரா எஸ்டேட்டிற்கு திரும்புகிறாள். நல்லாவும் அவர்களுடன் வாழ்கிறான். இனிமையான வாழ்வின் வசந்தம் அவர்களுக்கு வசமாகியது. நல்லாவை ஜார்ஜ் தங்கள் பாரம்பரிய விஷயங்களை கற்றுக் கொடுக்கவும் அவனை மேலும் திறமைசாலியாக்கவும் காட்டுக்கு அழைக்கிறார். ஆனால் சாரா அவனை பிரிய மனம் ஒப்பாமல் அனுப்ப மறுக்கிறாள். இதற்கிடையில் கார்னே முதலை கடித்து இறந்த செய்தியை அன்றைய தினசரியில் வாசிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவரை ப்ளெட்ஜர்தான் ஆற்றில் தள்ளி கொன்றிருக்கிறான் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த சில நாட்களில் கார்னேயின்ன் மகளை மணந்து அப்பெரும் சொத்திற்கு அதிபதியாகிறான் என்பதையும் கேள்விப்படுகிறார்கள். அடுத்த சில நாட்களில் ட்ரோவர் வீட்டில் இல்லாத சமயத்தில் ப்ளெட்ஜர் சாராவைப் பார்க்க வருகிறான். கார்னேயின் இறப்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறான். அவன் அங்கிருந்து கிளம்புவதாகத் தெரியவில்லை. எரிச்சல் அடைந்த அவள் அங்கிருந்த அம்புகளில் அடுக்கை அவனுக்குக் காட்டுகிறாள். அதில் ஒன்று இருக்கவில்லை. அவன் கிளம்பிவிடுகிறான். நல்லாவின் பாட்டியிடம் இவன் இங்கு வந்து போனதை ட்ரோவரிடம் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறாள் சாரா.
அடுத்த நாள் நல்லாவை காணாமல் பதட்டமடைகிறாள் சாரா. ட்ரோவரும் அவளும் அவனைத் தேடித் திரிந்து கடைசியில் ஜார்ஜிடம் பத்திரமாக இருப்பதைப் பார்த்து நிம்மதி அடைகிறார்கள். இனி ஒரு போதும் தன்னை விட்டு போக்க் கூடாது என்று சொல்லி அவனை திரும்ப அழைத்து வருகிறாள். ஆனால் அடுத்த சில தின்ங்களில் போலீஸ் ஜார்ஜையும் நல்லாவையும் பிடித்துவிடுகின்றனர். ஜார்ஜை சிறையிலும் நல்லாவை காப்பகத்திற்கும் அனுப்பி விடுகிறார்கள்.
சாரா பரிதவித்துவிடுகிறாள். அச்சமயத்தில் உலகப் போர் சூழல் எழுகிறது. டார்வினுக்கு ஒரு வேலையாக வந்த சாரா நல்லாவின் குரல் எங்கேயோ தொலை தூரத்தில் கேட்டு பரவசம் அடைகிறாள். இவளின் அண்மையை மனதால் உணர்ந்த நல்லாதான் அவளுக்காக பாடியிருக்கிறான். வேறு ஒரு ஊருக்கு இடமாற்றம் செய்யப்படுகையில் அவனைச் சந்தித்திருக்கிறாள். அங்கு வந்த ப்ளெட்ஜரும் அவன் மனைவியும் இதைப் பார்க்கிறார்கள். ப்ளெட்ஜரின் மனைவி இவ்விஷயத்தில் சாராவிற்கு உதவுமாரு அவனிடம் சொல்லவே அவனும் என்னதான் இருந்தாலும் நல்லா தன் மனக் என்ற துளி பாசத்தில் சாராவிடம் உதவி வேண்டுமா என்கிறான். அவள் அவனிடம் வேண்டாம் என மறுத்து தன் நல்லாவை தான் எப்படியும் மீண்டும் அழைத்துக் கொள்வேன் என்கிறாள்.
கடுமையான போர் சூழலில் சாரா ஒரு வானொலி நிலையத்தில் சேவைக்காக வேலை செய்கிறாள். நாட்கள் யுகங்களாக கடக்கிறது. ட்ரோவரும் நல்லாவும் இல்லாத தனிமையில் சோகமாக இருக்கிறாள் சாரா. போரின் அபாய நெருக்கடியில் அங்கிருப்பவர்களை அகற்றுகிறார்கள் ராணுவத்தினர். கடைசிக் கப்பலும் வந்துவிடவே சாரா மனமில்லாமல் நிற்கிறாள். பனி சூழ்ந்த அவ்விட்த்தில் எங்கிருந்தோ நல்லாவின் சன்னமான குரல் அவள் காதுகளில் ஒலிக்கிறது. முதலில் நல்லா பாட மற்ற குழந்தைகளின் குரல் அதனைத் தொடர்கிறது. இதைக் கேட்டபடி ஓடோடி வருகிறாள் சாரா. மெல்ல பனி மூட்டம் விலகி ஒரு போட் அருகே வர அதில் நல்லாவைப் பார்க்கிறாள் சாரா. அவளைப் பார்த்துவிட்ட நல்லாவும் ஓடோடி வந்து அவளை இறுகி அணைத்தப் படி சொல்கிறான் அவளுக்காகத் தான் பாடினான் என்று. எப்படி வந்தாய் என அவள் கேட்கையில் பின்னாலிருந்த ட்ரோவர் தெரிய அக்குடும்பம் சந்தோஷ ஆரவாரத்துடன் மீண்டும் ஒன்றிணைகிறது.
ட்ரோவரும் சாராவும் நல்லாவுடன் தங்களின் அங்கிருந்த பாருக்குச் செல்கிறார்கள். தன் மனைவியையும் சொத்துக்களையும் போரில் இழந்திருந்த ப்ளெட்ஜர் இவர்களின் சந்தோஷ மனநிலையைப் பார்த்து கொதித்துப் போகிறான். ட்ரோவர் பாருக்குள் சென்றுவிட தனியாக நடந்துகொண்டிருந்த நல்லாவின் மீது இப்போது அவனின் பார்வை பதிகிறது. தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுக்கிறான். இதையெல்லாம் தூரத்தில் ஒரு டவரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் ஜார்ஜ். ஏதோ சரியில்லை என்பதை உள்ளுணர்வால் உணர்ந்த சாராவும் திரும்பிப் பார்க்க அங்கு ப்ளெட்ஜரைக் கண்டு
அதிர்ச்சியடைந்து கத்தியபடி நல்லாவை நோக்கி ஓடிவருகிறாள். பாரிலிருந்து இதைக் பார்த்தட்ரோவரும் நல்லாவைக் காப்பாற்ற ஓடி வருகிறான். அதற்குள் முதல் தோட்டா பாய்ந்துவருகிறது. ப்ளெட்ஜர் துப்பாக்கியை மேலும் உயர்த்தி குறிவைக்கிறான். ஆனால் இம்முறை அவன் சுடுவதற்குமுன் பாய்ந்துவந்த ஜார்ஜ் என் பேரன் அவன் உனக்கு மகனும் கூட அவனைப் போய் கொல்கிறாயே என்றபடி
அவன் மேல் அம்பை விட்டெறிந்தார். ப்ளெட்ஜர் இறந்துவிடுகிறான். ஜார்ஜ் அங்கிருந்து விரைவாக மறைகிறார். ட்ரோவர் நல்லாவை தாங்கி அவனை எழுப்பவே அவன் விழிக்கிறான். தனக்கு ஒன்றுமில்லை குண்டு தன்மீது படவில்லை என்கிறான். அனைவரும் வீடு திரும்புகிறார்கள். அன்றிரவு மகிழ்ச்சியுடன் உணவருந்தி ஆடுகிறார்கள். அங்கு வந்த ஜார்ஜிடம் நல்லாவை அழுந்த முத்தமிட்டு ஒப்படைக்கிறாள் சாரா.
1973-ல் ஆஸ்திரேலியாவில் கலப்பின குழந்தைகளை பிடித்துச் செல்லும் வழக்கத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதுவரை நடந்த தவறுகளுக்கு பிரதம மந்திரி மன்னிப்பு கேட்பதுடன் படம் நிறைவடைகிறது.
நடிப்பு : நிக்கோலே கிட்மான் (சாரா),
ஹ்யூ ஜாக்மன், ப்ரையன் ப்ரவுன், டேவின் வென்ஹாம்
இயக்குனர் - பாஸ் லாஹ்ர்மான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக