தோழர்கள் எண்ணிக்கை

வெள்ளி, 15 அக்டோபர், 2010

The Circle

வாழ்வை நமக்கு மிக நெருக்கமாகக் காட்டுகின்றது சினிமா. அதனால் தான் அதன் மேல் ஒரு தீரா மோகம் நம்மை எப்போதும் ஆட்டி படைக்கிறது.
நம்மை திரையில் பார்ப்பது போன்ற உணர்வுகளால் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதனால் தான் ஆனால் உலக சினிமாவிலிருந்து ஈரானிய சினிமா எப்போதும் தனித்தே நிற்கின்றது.



அனைத்து விதமான சினிமா வகை மாதிரிகளை விடவும் ஈரானிய சினிமாவில் வாழ்வும் சமூக பொறுப்பும் எப்போதும் பனித்துளியைப் போல் பதிவு செய்யப்படுகின்றது. அதனால் தான் மிக குறுகிய காலத்தில் உலகம் முழுவது ஒரு சொல்ல முடியாத ஈர்ப்பையும் தன்னகத்தே கொண்டு உயர்ந்து நிற்கிறது.
அப்படி பெண்களின் வாழ்வியலை மையமாக கொண்ட துயகயச Pயயொi யின் மற்றொருமொரு அதி உன்னத படைப்பு வுhந ஊசைஉடந. ஆனால் மிக கடுமையான தணிக்கை முறை உள்ள ஈரானியில் தடை செய்யப்பட்ட இந்த திரைப்படம் 2000ம் ஆண்டு வெளிவந்தது. மொழி பெர்சியன்.
மருத்துவமனையில் பிரசவ வார்டில் சொல்மாஸ் என்ற நடுத்தர வயது பெண்மணியை அழைத்து அவளுடைய மகளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்திருபதாக கூறுகிறாள் செவிலி. மனமுடைந்து போகிறாள் சொல்மாஸ். மகன் பிறக்காவிட்டால் தனது மகளை விவாகரத்து செய்ய நேரிடும் என்று மருமகனின் பெற்றோர் சொல்லியிருப்பதை செவிலியிடம் கூறுகிறாள். தனது இன்னொரு மகளை கூப்பிட்டு குழந்தை பிறந்த விஷயத்தை அனைவருக்கும் தெரிவிக்க சொல்கிறாள்.
தொலைபேசியில் தகவல சொல்ல நேரும் போது அங்கு மூன்று பெண்களை காண்கிறாள். அவர்கள் பேசுவதிலிருந்து அவர்கள் மூவரும் சிறையிலிருந்து சில நாட்கள் முன் தான் வெளியே வந்திருப்பதையும் அறிகிறாள். அவர்கள் மீண்டும் ஊருக்கு செல்ல பணம் இல்லாமல் தவிக்கின்றனர். சில நகைகள் விற்று ஊர் செல்லவும் முயலும் போது ஒருத்தி போலிசாரால் கைது செய்யப்படுகிறாள்.
மற்ற இருவரான எரிசோவும் நர்கீஸும் பயந்து ஒடி விடுகின்றனர். ஒரு விபசார புரோக்கர் மூலம் சிறிது பணம் சம்பாதித்து எரிசோவை ஊருக்கு அனுப்ப முயன்று பணத்தையும் தந்து விட்டு ஊருக்குள் போய் விடுகிறாள்.
எரிசோ விற்கு ஊருக்கு செல்ல முற்படும் போது பெண்கள் தனியே பயணிக்க கூடாதென்றும் அப்படி போவதென்றால் தகுந்த பத்திரங்கள் வேண்டுமென்று கூறகிறார் நிலைய அதிகாரி. தான் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சி நடுங்குகிறாள் எரிசோ.
சொல்ல முடியாத வேதனையுடன் சுற்றி திரிகிறாள். அப்போது சிறையிலிருந்து அன்று தான் வெளியான பாரி என்பவளை சந்திக்கிறாள். பாரி திருமணமாகாமல் கர்ப்பமானவள். அதற்கு காரணமானவனுக்கு மரண தண்டளை விதிக்கப்ப்ட்டு நிறைவேற்றப்பட்டும் விட்டது. சிறையிலிருந்து விடுதலையானவள் எங்கு போவாள்...??
ஆனால் சிறையிலிருந்து வெளி வந்த அவளை வீட்டின் உள்ளே கூட சேர்க்காமல் அடித்து விரட்டுகிறான் அவளின் தந்தை. அவளது சகோதர்களை பார்க்க கூட அனுமதியளிக்க மறுக்கிறார் அவளின் தந்தை. உயிர் தப்பித்தால் போதும் என்று வீட்டை விட்டு ஒடி வந்து விடுகிறாள்.
தனது சிறைத்தோழியான எல்ஹாம் என்பவளை சந்தித்து கருக்கலைப்பு செய்ய உதவுமாறு கேட்கிறாள். ஆனால் அவளோ தான் சிறையில் இருந்ததும் கடந்த கால வாழ்வும் தனது தனது மருத்துவனான கணவனுக்கு தெரியாதென்றும் அவளால் எந்த உதவியும் செய்ய இயலாத நிலைமையும் விவரிக்கிறாள்.
மீண்டும் வேறு எங்காவது சென்று பிழைக்க வழி தேடும் நேரத்தில் ஒரு பெண்மணி தனது மூன்று வயது குழந்தையை ரோட்டிலே தனியே விட்டு விட்டு ஒட முயற்ச்சி செய்வதை பார்க்கிறாள்.
அவளை விசாரித்த போது அவளது விதவையென்றும் வறுமை அவளை வாட்டுவதால் குழந்தயை விட்டு சென்றால் யாராவது எடுத்து சென்று வளர்ப்பார்கள் என்று நம்புவதாய் கூறுகிறாள்.
ஏற்கனவே மூன்று முறை விட்டு சென்றதும் ஆனால் அது நிறைவேறவில்லை என்றும் வருத்ததுடன் கூறுகிறாள். அந்த நேரம் போலிஸ் வந்து குழந்தையை தூக்கி செல்லவே தெருவிலேயே சுற்றி திரிகிறாள் அந்த பெண். விபச்சாரி என்று கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்படுகிறாள்.
சிறிது நேரத்தில் வேறு ஒரு பெண்ணும் விபச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாள். இரும்பு சுவர்களாலான வட்ட வடிவ சிறையில் உள்ளே நுழைநததும் திரையில் முன்னர் பார்த்த பெண்களும் இருக்கிறார்கள்..
கனமான வாயில்களுக்கு வெளியே காவலாளியிடம் சொல்மாஸ் அங்கு இருக்கிறாளா..?? என்று தொலைபேசியில் கேட்கிறார் அதிகாரி. அவள் மற்றொரு பிரிவில் இருப்பதாக கூறுகிறான் காவலாளி. முதல் காட்சியில் ஆரம்பித்த புள்ளியிலிருந்து இத்துடன் வட்டம் நிறைவடைவதாய் திரைப்படமும் நிறைவு பெறுகிறது.
திரைப்படத்தை ஒரு முழுநீள கதையாக சொல்லாமல் தனி தனி காட்சிகளாக சொல்லி ஒரு வட்டமாக முடிக்கிறார் இயக்குநர். மிகவும் குறைந்த கதாபாத்திரங்கள். ஐந்து பெண்களை மையப்படுத்திய சில காட்சிகள் நிறைவு பெறாமலும் நம் எண்ணத்திற்கு விட்டு விடுவதும் சிறப்பு. ஒவ்வொர் கதையும் பெண்களின் வாழ்வியலில் முற்று பெறாத துயங்களை போல முற்று பெற்றதாக இல்லை.
அது தவிர சில காட்சிகள் யூகிக்க தக்க குறீடுகளால் நிரம்பியுள்ளது தனிச்சிறப்பு.
சிறு பெண் குழந்தையை விட்டு விட்டு தாய் ஒட முற்படும் போது மணவிழாவில் ஒரு பெண் சிரித்து மகிழ்வதாய் அமைத்திருப்பதும் பேருந்து நிலையத்திலும் மருத்துவம்னைகளிலும் பெரிய ஹால்களில் வட்ட வடிவ சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது பெண் ஒரு வட்டத்தில் எப்போதும் அடைக்கப்பட்ட்வள் என்பதை சொல்லாமல் சொல்கிறார் இயக்குநர்.
.ஈரானில் பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களும் வன் கொடுமைகளையும் சித்தரிப்பதால் தானோ அங்கு தடை செய்யப்பட்டுள்ளது..
சிங்கப்பூர், உருகுவே உட்பட பத்திற்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாக்களில் பரிசையும் பாராட்டையும் பெற்றதுடன் வெனிஸ் திரைப்பட விழாவில் தங்க சிங்கம் விருதையும் வென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக